புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 11 மார்ச் 2020 (19:27 IST)

சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி !

சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி !

தென்னாப்பிரிக்க  அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை நடக்கவுள்ளது. இதில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
தென்னாப்பிரிக்க அணி, இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
 
இத்தொடருக்கான முதல் போட்டி நாளை தர்மலசாலாவில் உள்ள மைதானத்தில் நடக்கவுள்ளது.
 
இப்போட்டியின் போது, கோலி , இன்னும் 133 ரன்கள் அடித்தால் , சச்சின் டெண்டுல்கர் 12 ஆயிரம் ரன்களை கடந்தவர்  என்ற சாதனையை முறியடித்துவிடலாம். மேலும் சச்சின் 12 ஆயிரம் ரன்களை 300 ஒருநாள் போட்டிகளில் கடந்தார். கோலி, 239 போட்டிகளில் விளையாடி மிகக் குறைந்த போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது.