Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

துணை கேப்டன் விராட் கோலி: கேப்டன் யார்??

Last Updated: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (16:32 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.
உறவினர்களுக்காக டெல்லியில் வரும் 21 ஆம் தேதியும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாத்துறை நண்பர்களுக்காக மும்பையில் வரும் 26 ஆம் தேதியும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருமணத்துக்கு பின்பும் அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்கப்போவதால் விராட் கோலி டெல்லியிலிருந்து மும்பைக்கு குடியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுமண ஜோடிக்கு கிரிக்கெட் வட்டாரங்கள், திரை வட்டாரங்களில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கோலி இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.


தற்போது திருமணமான கோலி இனி வீட்டில் துணை கேப்டனாக செயல்படுவார் என பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ரிதீஸ் தேஸ்முக் தனது டுவிட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :