செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 டிசம்பர் 2018 (12:55 IST)

பெர்த் டெஸ்ட்டில் தோற்றாலும் கோஹ்லிதான் நம்பர் 1….

பெர்த் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையிலும் அப்போட்டியில் சதமடித்த இந்தியக் கேப்டன் 19 புள்ளிகள் அதிகம் பெற்று தொடர்ந்து ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

ஐசிசி சமீபத்தி டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை அறிவித்தது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அவர் பெர்த் டெஸ்ட்டில் சதமடித்தன் மூலம் 14 புள்ளிகள் பெற்று 934 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளார்.

அவரையடுத்து நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 914 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஐசிசி தரவரிசை
1.விராட் கோலி                               - 934 புள்ளிகள்
2. கேன் வில்லியம்சன்                  - 914 புள்ளிகள்
3. ஸ்டீவன் ஸ்மித்                          -892 புள்ளிகள்
4.செத்தேஸ்வர் புஜாரா               -816 புள்ளிகள்
5.ஜோ ரூட்                                        -807 புள்ளிகள்
6.டேவிட் வார்னர்                          -787 புள்ளிகள்
7. டிமித் கருனரத்னே                   -752 புள்ளிகள்
8.டீன் எல்கர்                                   -724 புள்ளிகள்
9.ஹென்றி நிக்கோல்ஸ்              -708 புள்ளிகள்
10.அஸார் அலி                               - 708 புள்ளிகள்