வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (21:37 IST)

விராட் கோலியின் அதிரடியில் இந்தியா வெற்றி

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து  அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.


 

 
நியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 285 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
 
இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த போட்டியில் 286 ரன்கள் இலக்கை நோக்கி கடுமையாக போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.
 
ரஹானே மற்றும் ரோகித் சர்மா சொர்ப ரன்களில் ஆட்டமிழக்க, தோனி மற்றும் விராட் கோலி சேர்ந்து அதிரடியை தொடங்கினர். தோனி 9000 ரன்களை கடந்ததுடன் அரை சதம் அடித்து அணிக்கு வலு சேர்ந்தார்.
 
80 ரன்கள் எடுத்த நிலையில் தோனி ஆட்டமிழந்தார். மனிஷ் பாண்டே களமிறங்கி கோலியுடன் கைக்கோர்க்க இருவரும் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
 
48.2 ஓவரில் 289 ரன்கள் 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றிப் பெற்றனர். விராத் கோலி சதம் அடித்து 154 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிக்காமல் களத்தில் இருந்தார்.