Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சகோதரி இல்லாத குறையை தீர்த்த வீனஸ் வில்லியம்ஸ்


sivalingam| Last Modified வெள்ளி, 14 ஜூலை 2017 (06:50 IST)
லண்டனில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரம்பம் முதலே வெற்றிகளை குவித்து வரும் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் தற்போது இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார்


 
 
கர்ப்பம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் இந்த விம்பிள்டன் போட்டியில் விளையாட முடியாத நிலையில், அவரது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் இந்த போட்டிகளில் தனது அபார திறமையால் முன்னேறி வருகிறார்.
 
இந்த தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவுடன் வீனஸ் வில்லியம்ஸ் மோதினார். இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்தது. ஜோஹன்னாவுக்கு பார்வையாளர்களின் ஆதரவு இருந்த போதிலும் வீனஸ் வில்லியம்ஸ் வெகு எளிதாக  6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
 
மேலும் நேற்று நடைபெற்ற இன்னொரு அரையிறுதி போட்டியில் முகுருசா வெற்றி பெற்றார். இதனால் இறுதிப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் - முகுருசா வரும் சனிக்கிழமை மோதவுள்ளனர். இதில் வெற்றி பெறுபவரே இந்த ஆண்டின் விம்பிள்டன் சாம்பியன் ஆவார்.


இதில் மேலும் படிக்கவும் :