ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (17:12 IST)

வெங்கடேஷ் அய்யர் அபார சதம்.. தனியொருவராய் கொல்கத்தா அணியை காப்பாற்றினார்..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிவரும் நிலையில் கொல்கத்தா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் டக் அவுட் ஆன நிலையில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான அமனுல்லா 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
 
கேப்டன் நிதிஷ் ராணா 5 ரன்களிலும்  மற்றொரு நட்சத்திர பேட்ஸ்மேன் ஷர்துல் தாக்கூர் 13 ரன்களிலும்  அவுட் ஆகினர். இந்த நிலையில் கொல்கத்தா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் வெங்கடேஷ் அய்யர் தனி ஒருவராய் கொல்கத்தா அணியின் ஸ்கோரை உயர்த்தி காட்டினார் 
 
கொல்கத்தா அணி மொத்தமே 159 ரன்கள் அடித்து உள்ள நிலையில் அதில் 100 ரங்களை வெங்கடேஷ் அய்யர்  அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெங்கடேஷ் ஐயர் மற்றும் கடைசி ஓவர் சிக்ஸர் நாயகன் ரிங்கு சிங் விளையாடி வரும் நிலையில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva