1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (19:10 IST)

கவாஸ்கர், சச்சினின் பயிற்சியாளர் காலமானார்: கிரிக்கெட் நட்சத்திரங்கள் இரங்கல்!

கவாஸ்கர், சச்சினின் பயிற்சியாளர் காலமானார்: கிரிக்கெட் நட்சத்திரங்கள் இரங்கல்!
கவாஸ்கர் சச்சின் உள்பட பல முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு பயிற்சியாளராக இருந்த வாசு என்பவர் காலமானதை அடுத்து கிரிக்கெட் நகரங்களில் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
கிரிக்கெட்டில் பிரபலமாக இருந்த சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல நட்சத்திரங்களுக்கு பயிற்சியாளராக இருந்தவர் கிரிக்கெட் பயிற்சியாளர் வாசு பரஞ்சாபே. பல கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கிய இவர் வயது மூப்பு காரணமாக மும்பையில் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 82
 
கிரிக்கெட் பயிற்சியாளர் வாசு பரஞ்சாபேஅவர்கள் காலமானதை அடுத்து கிரிக்கெட் நட்சத்திரங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய இறப்பு கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அதனை ஈடு செய்ய முடியாது என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்