வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (16:40 IST)

”எனது அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தான்”.. பி.வி.சிந்து உறுதி

எனது அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது தான் என பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார் பி.வி,சிந்து. இதனால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பி.வி.சிந்து, “விளையாட்டில் தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று வருகிறேன். நான் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அது நிறைவேறாத பட்சத்தில் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. இது போன்ற விமர்சனங்களும் எதிர்பர்ப்புகளும் என்னை பாதிக்காது” என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மேலும் அவர், "எனது அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக் தான், நிச்சயமாக ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கம் வெல்வேன்” எனவும் கூறியுள்ளார்.