செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (07:07 IST)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்தா? அதிர்ச்சி தகவல்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்தா?
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் அம்மாகாணத்தை மட்டுமின்றி நாடு முழுவதிலும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. இவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் சீனாவை மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து சீனாவில் நடத்தப்பட்ட நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் வரும் மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிட்டால் டோக்கியோவில் நடக்கவிருக்கும் இந்தாண்டின் ஒலிம்பிக் போட்டியும் ரத்தாக அதிக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஒலிம்பிக் விளையாட்டு வீர்ர்களும் ரசிகர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.