திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (08:08 IST)

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: மாணவர்கள் ஆர்வம்..!

NEET
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தினம் என்பதால் இன்றுக்குள் விண்ணப்பம் செய்யுமாறு மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 
 
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மருத்துவ கல்வி படிக்க இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ்நாடு மட்டும் இந்த தேர்வை எதிர்த்த போதிலும் மற்ற அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதால் இந்த தேர்வு தொடர்ச்சியாக நடந்த போகிறது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதி அதாவது இன்று கடைசி தேதி என்பதை அடுத்து உடனடியாக விண்ணப்பம் செய்யாதவர்கள் இன்று விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 
 இன்று இரவு 11 30 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்கும் இணையதளம் இதோ; 
neet.nta.nic.in
 
Edited by Siva