1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (19:22 IST)

டாஸ் வென்ற ஐதராபாத்: பந்துவீசும் சிஎஸ்கே

டாஸ் வென்ற ஐதராபாத்: பந்துவீசும் சிஎஸ்கே
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 23வது போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ஹைதராபாத் கேப்டன் வார்னர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்
 
இதனை அடுத்து ஐதராபாத் அணி வீரர்கள் சற்று நேரத்தில் களமிறங்கவுள்ளனர். இன்றைய போட்டியில் ஐதராபாத் அணியில் மனிஷ் பாண்டே மற்றும் சந்தீப் சர்மா களம் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
புள்ளி பட்டியலில் ஐதராபாத் அணி கடைசி இடத்தில் உள்ள நிலையில் அந்த அணி இன்று வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் சென்னை அணி இன்று வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தை பிடித்து விடும் என்பதும் பெங்களூரு அணியை பின்னுக்கு தள்ளிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், நிகிடி, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்
 
ஐதராபாத் அணி: டேவிட் வார்னர், பெயர்ஸ்டோ, வில்லியம்சன், மனிஷ் பண்டே, கேதார் ஜாதவ், விஜய்சங்கர், ரஷித் கான், சுசித், சந்தீப் சர்மா, கலீல் அகமது மற்றும் சித்தார்த் கெளல்,