டி.என்.பி.எல்: திருச்சி அணி த்ரில் வெற்றி

Last Modified புதன், 11 ஜூலை 2018 (22:52 IST)
ஐபிஎல் போன்று கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டி இன்று தொடங்கியது. இன்றைய முதல் ஆட்டம் திருநெல்வேலியில் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோதின
டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்தது. ரோஹித் 46 ரன்களும், கேப்டன் அஸ்வின் 42 ரன்களும், ஹரி நிஷாந்த் 41 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. எஸ்.எஸ்.குமார் 45 ரன்களும், பரத்ஷங்கர் 39 ரன்களும், சோனுயாதவ் 30 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் திருச்சி அணி முதல் இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :