வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (08:48 IST)

இரண்டாவது டெஸ்ட்டுக்கான டிக்கெட் விற்பனை… இன்று ஆரம்பம்!

சேப்பாக்கத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்பட அனைத்து டெஸ்ட் போட்டிகளைக் காணவும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அதனையடுத்து 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முதல் போட்டிக்கு பார்வையாளர் அனுமதியை மறுத்தது.

இரண்டாவது டெஸ்ட் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இன்று அதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாக தொடங்குகிறது. 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலான டிக்கெட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.