ஒன்றல்ல இரண்டல்ல மூன்று சூப்பர் ஓவர்கள்: ஐபிஎல் ஆச்சரியம்!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் நடந்த இரண்டு போட்டிகளில் மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டன
நேற்று நடந்த முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 163 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது இந்த சூப்பர் ஓவரில் ஐதரபாத் இரண்டு மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டை இழந்தது என்பதும், கொல்கத்தா மூன்று ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியிலும் இரு அணிகளும் தலா 176 ரன்கள் எடுத்ததை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்ததால் மீண்டும் சூப்பர் ஓவர் வீசப்பட்டது
இரண்டாவதாக வீசப்பட்ட சூப்பர் ஓவரில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 11 ரன்களும், பஞ்சாப் அணி 4 பந்துகளில் 15 ரன்களும் எடுத்ததால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது
எனவே நேற்றைய ஞாயிறு ஒரே நாளில் இரண்டு போட்டிகளில் மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.