1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (08:00 IST)

3வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

india won wi
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கெய்லே மேயர்ஸ் 73 ரன்கள் எடுத்தார்
 
இதனை அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 19 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பதும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது