திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 மார்ச் 2019 (18:29 IST)

உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக வித்தியாசமான அவுட்!

கிரிக்கெட் விளையாட்டில் போல்ட், கேட்ச், ஸ்டெம்பிங், ரன் அவுட், எல்.பி.டபிள்யூ, ஹிட் விக்கெட் என ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகும் முறை பலவிதங்களில் உள்ளது. ஆனால் உலக கிரிக்கெட் விளையாட்டில் முதல்முறையாக வித்தியாசமான முறையில் அவுட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது
 
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் நியூசிலாந்து அணியின் பெர்க்கின்ஸ் அடித்த பந்து ஒன்று ரன்னராக நின்று கொண்டிருந்தவரின் பேட்டில் பட்டு, பின் அது கேட்சாக மாறியது.
 
இதனையடுத்து மூன்றாவது அம்பயர் இதனை பெர்க்கின்ஸ். கேட்ச் முறையில் அவுட் ஆனதாக அறிவித்தார். உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்று ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 166 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது