வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2016 (12:17 IST)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: ஃபெடரர், ஜோகோவிச் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


 

 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில், செர்பியாவின் ஜோகோவிச், தென் கொரியாவின் ஹையன் சுங்கை 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார். 
 
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜார்ஜியாவின் நிக்கோலஸை 6-2, 6-1, 6-2 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.
 
இதனால், ரோஜர் ஃபெடரரும், நோவக் ஜோகோவிச்சும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.