புதன், 4 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (15:19 IST)

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

கர்நாடக அணிக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியில்  சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார், இதன் மூலம் அவர் பங்கேற்ற கோவா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

கேஎஸ்சிஏ இன்விடேஷனல் கிரிக்கெட் போட்டி தொடரில்  கர்நாடகா மற்றும் கோவா மோதின. இந்த போட்டியில் இரு இன்னிங்ஸிலும் 26.3 ஓவர்கள் பந்து வீசிய அர்ஜுன், 87 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில், கர்நாடக அணி 36.5 ஓவர்களில் 103 ரன்களில் சுருண்டது. இந்த இன்னிங்ஸில்,  அர்ஜுன் டெண்டுல்கர் 13 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதற்குப் பிறகு, கோவா அணி 413 ரன்கள் குவித்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் கர்நாடகா 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸில் அர்ஜுன் டெண்டுல்கர், 4 விக்கெட்டுகளை எடுத்தார், அவருடைய அபார பந்து வீச்சால் கோவா அணி இன்னிங்ஸ் மற்றும் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Mahendran