Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி


sivalingam| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (23:06 IST)
புரோ கபடி போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் இன்றைய வெற்றியால் நம்பிக்கை பெற்றுள்ளனர்.


 
 
சச்சின் தெண்டுல்கரின் உரிமையாளராகவும், கமல்ஹாசன் தூதுவராகவும் உள்ள தமிழ் தலைவாஸ் அணி இன்று பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதியது.
 
முதலில் இருந்தே புள்ளிகள் அதிகம் பெற்று வந்த தமிழ் தலைவாஸ் அணி இறுதியில் 29-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் கடைசி இடத்தில் இருந்தாலும் ஒரு வெற்றியை தமிழ் தலைவாஸ் அணி பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :