ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : சனி, 11 மே 2024 (20:05 IST)

கொல்கத்தா vs மும்பை போட்டி மழையால் இன்னும் தாமதம் ஆகலாம்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று 7.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மழை காரணமாக இன்னும் டாஸ் கூட போடவில்லை என்பதை சற்றுமுன் பார்த்தோம்.
 
 இந்த நிலையில் இன்னும் மழை பெய்து கொண்டிருப்பதால் இன்றைய போட்டி தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று கூறி கூறப்படும் நிலையில் இது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் என்று கூறப்படும் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் 
 
அதில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்க இன்னும் தாமதமாகலாம். கொல்கத்தாவில் உள்ள மழை மேகங்கள் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. வலுவிழந்து வரும் இரண்டாவது மழை மேகங்களும் கொல்கத்தாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன
 
எனவே சிறிது நேரத்திற்கு மைதானம் இருக்கும் பகுதியில் மிதமான மழை பெய்யக்கூடும். இதன் காரணமாக கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி தாமதமாகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போலவே மழை காரணமாக தற்போது போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்பதும் இன்னும் டாஸ் கூட போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva