1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (22:14 IST)

உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர்

carlson
உலகின் பிரபல செஸ் சாம்பியனான கார்ல்சனை இந்திய வீரர்  அர்ஜூன் எரிகைசி வீழ்த்தியுள்ளார்.

ஏய்ம்ஸ்செஸ் ரேபிட் ஆன்லை  சாம்பியன்ஷிப்  தொடர் கடந்த பிப்ரவரி முதல் தொடர்ந்து 9 சுற்றுகளாக   நடந்து வருகிறது.  இதுவரை 7 தொடர்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 8 வது செஸ் தொடர் நடந்து வருகிறது.

இந்த ஒன்பது சுற்று ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்சனை எதித்து விளையாடிய தமிழக வீரர் குகேஷ்( 16)  26 வது காய் நகர்த்தலின்போது கார்ல்சனை வீழ்த்தினார்.

எனவே, தமிழக வீரர் குகேஷுக்கு  ரசிகர்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே உலக செஸ் சாம்பியனான கார்ல்சனை, தமிழக வீரர் பிரக்யானந்தா, அர்ஜூன் எரிகைசி ஆகியோர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj