வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 18 ஜூன் 2016 (11:07 IST)

ஒலிம்பிக்கில் தமிழக வீரர் சதீஷ் குமார்: தங்கம் வெல்வாரா?

ரியோடி ஜெனீரோவில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழகத்தின் வேலூர், சத்துவாச்சாரியை சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


 
 
கடந்த ஏப்ரல் மாதம் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்க இரண்டு இடங்களை உறுதி செய்தது இந்தியா.
 
இந்த இரண்டு வீரர்கள் யார் என்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்றது. இந்த தகுதிச்சுற்றில் ஆண்கள் பிரிவில் மொத்தம் 336 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்த தமிழகத்தை சேர்ந்த சதீஷ் குமார் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
 
பெண்கள் பிரிவில் மொத்தம் 192 கிலோ எடையை தூக்கி மணிப்பூரை சேர்ந்த சாய்கோம் மீராபாய் சானு ஒலிம்பிக் தகுதியை பெற்றார். இதில் ஸ்னாட்ச், கிளீன் அன்ட் ஜெர்க் என இரு பிரிவுகளிலும் தேசிய சாதனை படைத்தார் மீராபாய்.
 
2014-இல் நடைபெற்ற காமென்வெல்த் விளையாட்டில் சதீஷ் குமார் தங்கப்பதக்கமும், மீராபாய் வெள்ளிப்பதக்கமும் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.