வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஏப்ரல் 2018 (17:32 IST)

ஐபிஎல் போட்டியிலிருந்து ரெய்னா விலகல்

சென்னை சூப்பர் கிக்ஸ் அணியில் விளையாடும் சுரேஷ் ரெய்னா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இதனால் தமிழக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுள்ளனர். தோனி தலைமையிலான சென்னை அணி என்றாலே இந்தியா முழுவதும் தனி ரசிகர்கள் உண்டு.
 
டி20 போட்டி குறிப்பாக ஐபிஎல் போட்டியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இவரது அதிரடியில் சென்னை அணி பலமுறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடிய போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
 
இதனால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சுரேஷ் ரெய்னா விலகியது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.