1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (15:43 IST)

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி.. இலங்கை கேப்டன் பதவி விலகலா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி பெறும் 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 
 
இதனை அடுத்து 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
 
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் படு மோசமாக விளையாடியதை அடுத்து இலங்கை கேப்டன் பொறுப்பில் இருந்து தசுன் ஷனகா விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அடுத்த மாதம் இந்தியாவின் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் மெண்டிஸ் இலங்கை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva