இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இரட்டை சதம் அடித்த பாகிஸ்தான் வீரர்..!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் பாகிஸ்தான் அணியின் ஷகீல் என்பவர் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 312 ரன்கள் எடுத்தது. டிசில்வா அபாரமாக சதமடித்தார்
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வந்த நிலையில் தான் ஷகில் மிக அபாரமாக விளையாடி 208 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமில்லாமல் இருந்தார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் முதலில் இன்னிங்ஸில் 461 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 14 ரன்கள் எடுத்துள்ள நிலையில் நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva