26 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இலங்கை: பெரரே காப்பாற்றுவாரா?

Last Modified செவ்வாய், 4 ஜூன் 2019 (17:06 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வரும் நிலையில் இலங்கை அணி 26 ஓவர்களில் 6 முக்கிய விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது. பெரரே மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி சதத்தை நெருங்கியுள்ளார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கருனரத்னே 30 ரன்களில் ஆட்டமிழக்க அதன்பின் களமிறங்கிய திரமினே, மெண்டிஸ், மாத்யூஸ், டெசில்வா மற்றும் NLTC பெரரே ஆகியோர் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுக்களை பறி கொடுத்தனர். MDKJ பெரரே மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 74 ரன்கள் எடுத்துள்ளார்.,

ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஹமித் ஹசன் ஒரு விக்கெட்டும் ஒரு விக்கெட் ரன் அவுட் முறையிலும் வீழ்ந்தது. இதே ரீதியில் சென்றால் இலங்கை அணி முழு 50 ஓவர்களையும் பூர்த்தி செய்யுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :