வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Lenin AK
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2014 (20:41 IST)

இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியத் தொடரில் இருந்து விலகியதைடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.
 
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டது. ஆனால் நிர்வாகத்துடனான ஊதியப் பிரச்சனை காரணமாக வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்றைய போட்டியுடன் தொடரை முடித்துக் கொள்வதாக மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் நவம்பர் 1 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. போட்டிகள் குறித்த கால அட்டவணை பிறகு தெரிவிக்கப்படும்.
 
இலங்கை கிரிக்கெட் வாரிய செயலர் நிஷந்தா ரணதுங்கா, 'இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாக' குறிப்பிட்டார்.
 
கடைசியாக இலங்கை அணி 2009 -10 ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது 2 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும், 1 - 1 என்ற கணக்கில் டி-20 தொடரையும், 3 - 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.