வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (20:23 IST)

6 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் ஹைதராபாத்!

பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் ஹைதராபாத் அணி 15 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரில் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதல் களமிறங்கிய ஹைதராபாத அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தவான் முதல் பந்திலே வெளியேறினார்.
 
அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 15 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்துள்ளது. இதனால் சென்னை அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.