உலகக்கோப்பை கால்பந்து: நேற்றைய இரண்டு ஆட்டங்கள் டிரா

Last Modified செவ்வாய், 26 ஜூன் 2018 (07:13 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த மூன்று ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் ரஷ்ய அணியை உருகுவே அணி தோற்கடித்தது. ஆனால் மற்ற இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.
நேற்று நடைபெற்ற ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. நேற்று போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடிய நிலையில். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் காலித் பவுடாய் ஒரு கோல் அடித்தார். இந்த கோலுக்கு பதிலடியாக ஸ்பெயின் அணியின் இஸ்கோ 19-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

அதேபோல் ஆட்டத்தின் 2அது பாதியின் 81-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸ்ரி என்பவர் ஒரு கோல் அடித்தார். ஆனால் கூடுதல் நேரத்தில் 91வது நிமிடத்தில் ஸ்பெயினின் லாகோ அஸ்பாஸ் ஒரு கோல் அடித்து இந்த கோலையும் சமன் செய்தார். இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றது.

அதேபோல் ஈரான் மற்றும் போர்ச்சுக்கள் அணிகளுக்கு இடையிலான போட்டியும் டிராவில் முடிந்தது. இரு அணி வீரர்களும் தலா ஒரு கோல் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :