ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (13:36 IST)

பிரபல தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரருக்கு கொரோனா!

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தற்போது தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் 
 
பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் லுங்கி நிகிடி. 25 வயதான இவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள லுங்கி நிகிடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக ஜூனியர் டாலா என்பவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் 
 
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் லுங்கி நிகிடி ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது