1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (07:50 IST)

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடரை இழந்த பாகிஸ்தான்

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரை நான்கு ஒருநாள் போட்டியில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் தொடரை வெல்லும் அணி எது என்பதை தீர்மானிக்கும் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுன் நகரில் நடைபெற்றது.
 
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது பாகிஸ்தான். தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் அக் 8 ரன்களில் அவுட் ஆனாலும், ஃபாகர் ஜாமன் பொறுப்பாக விளையாடி 70 ரன்கள் குவித்தார். இமாத் வாசிம் 47 ரன்களும், கேப்டன் சோஹைப் மாலிக் 31 ரன்களும் எடுத்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்தது.
 
241 ரன்கள் எடுத்தால் போட்டியில் வெற்றி பெறுவதோடு தொடரையும் வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா எந்தவித சிரமும் இன்றி 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டீகாக் 83 ரன்களும், டீபிளசிஸ் 50 ரன்களும், வான் டெர் டூசன் 50 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த தொடரின் நாயகனாக இமாம் உல் ஹக் மற்றும் போட்டியின் நாயகனாக டீகாக் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தென்னாப்பிரிக்கா அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது.