சானியா மிர்சாவை பார்க்க இந்தியா வரும் கணவர்- சிறப்பு அனுமதி!
தனது மனைவி சானியா மிர்சாவை ஐந்து மாதமாக சந்திக்க முடியாமல் இருந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்தியா வர சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தற்போது வரை தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடி வருகின்றனர்.
கொரோனா பரவல் ஏற்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது சானியா மிர்சா அவர் குழந்தையோடு இந்தியாவிலும், மாலிக் பாகிஸ்தானிலும் இருந்தனர். இதனால் கடந்த 5 மாதமாக இருவரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. இதையடுத்து இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் தொடர் விளையாட வரும் 28ம் தேதி சிறப்பு விமானம் மூலம் செல்லவுள்ளனர். அந்த அணியில் இடம்பெற்றுள்ள சோயிப் மாலிக் மற்றும் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வந்து சானியா மிர்சாவை சந்தித்து பின்னர் ஜூலை 24ம் தேதி இங்கிலாந்து திரும்ப சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.