செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (16:38 IST)

களத்தில் அடித்து நொறுக்குவோம் … ஷிகார் தவான் நம்பிக்கை!

இலங்கைக்கு செல்ல உள்ள இந்திய அணிக்கு தலைமையேற்றுள்ள ஷிகார் தவான் களத்தில் அடித்து நொறுக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் மற்றொரு அணி இலங்கை செல்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் மற்றொரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என்றும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று இலங்கைக்கு கிளம்ப உள்ள நிலையில் நேற்று அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவரும் ஆன்லைன் வாயிலாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தவான் ‘எங்கள் அணி மிகவும் சிறப்பான அணி. ஒவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்படுவோம் என்ற முனைப்பில் உள்ளனர். 14 நாட்கள் ஓட்டல் அறையில் தனிமையில் கழித்தோம். இனி களத்தில் இறங்கி அடிக்க காத்திருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.