செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (17:15 IST)

ஸ்பின் பாலை நன்றாக விளையாடுவார் என நினைத்தோம்… நல்லா நினச்சிங்க போங்க!

நேற்றைய போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய கேதார் ஜாதவ்வை ஏன் பிராவோக்கு முன்னர் இறக்கினோம் என்பது குறித்து பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்கு மிக முக்கியமானக் காரணமாக சொல்லப்படுவது கேதார் ஜாதவ்வின் டெஸ்ட் இன்னிங்ஸ்தான். இக்கட்டான நேரத்தில் இறங்கி ரன்களை சேர்க்க வேண்டிய நேரத்தில் அவர் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள் அவரைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துள்ளனர். காலை முதல் சமூகவலைதளங்கள் முழுவதும் கேதார் ஜாதவ் டிரோல்களும் மீம்ஸ்களுமாக பரவி வருகின்றன. மேலும் கேதார் ஜாதவ்வை அணியில் இருந்து நீக்கவேண்டும் என ஆன்லைனில் பெட்டிஷன் எல்லாம் உருவாக்கியுள்ளார்கள்.

இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் பிராவோ இருக்கும்போது ஏன் கேதார் ஜாதவ்வை முன் கூட்டியே இறக்கினோம் என்று பிளமிங் கூறியுள்ளார். அவர் ‘சுழல்பந்துகளை நன்றாக விளையாடுவார் என நம்பிதான் அவரை இறக்கினோம். ’ எனக் கூறியுள்ளோம்.