கங்குலியிடம் பெட் கட்டி தோற்று போன ஷேன் வார்ன்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (12:28 IST)
ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஷேன் வார்ன், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் பந்தயம் ஒன்றில் பெட் கட்டி தோற்றார்.

 
 
ஒரு விவாதத்தின் போது மைக்கேல் கிளார்க், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். 
 
ஆனால் கங்குலி இங்கிலாந்து அணி நிச்சயம் இறுதி போட்டிக்கு முன்னேறும் என கூறியுள்ளார். அப்போது ஷேன் வார்ன், குரூப் ஏ போட்டியில் கூட இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை வெல்லாது என தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து கங்குலி இங்கிலாந்து ஆதிரேலியாவை வெல்லும் என பெட் கட்டினார். அந்த பெட் என்னவெனில் தோற்பவர்கள் இங்கிலாந்து அணியின் டி ஷர்ட்டை நாள் முழுவதும் அணிய வேண்டும் என்பது தான்.
 
கங்குலி கூறியது போல இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்தியது. பந்தயத்தில் தோற்றதால் ஷேன் வார்ன் ஒரு நாள் முழுவது இங்கிலாந்து அணி டி ஷர்ட்டை அணிவதாக தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :