திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:57 IST)

கோலிக்கு கீழ் விளையாடும் போது பயப்படுகிறார்கள்…. ஆனால் ரஹானே? ஆஸ்திரேலிய வீரர் கருத்து!

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக தலைமையேற்று இந்திய அணியை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறச்செய்தார் ரஹானே.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெற்றி பெற்ற இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதிலும் கேப்டன் ரஹானேவின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் லி கோலி மற்றும் ரஹானே கேப்டன்சி குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘கோலி எப்போதுமே சிறந்த பேட்ஸ்மேன். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரின் கீழ் விளையாடும் போது வீரர்கள் பயப்படுகிறார்கள். அதுவே ரஹானே தலைமையில் மிகவும் கூலாக விளையாடுகிறார்கள். நான் இந்திய அணியின் தேர்வுக்குழுவில் இருந்தால் கோலியை நீக்கிவிட்டு ரஹானேவை கேப்டனாக்கி விடுவேன். கோலியை பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த சொல்வேன்’ எனக் கூறியுள்ளார்.