1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 26 நவம்பர் 2017 (17:54 IST)

கேட்பன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கலாம்; பலே சேவாக்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அவசியம் என்பதால் கேட்பன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.


 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் வீரர்களுக்கு ஓய்வு அளிக்காமல் இருப்பது குறித்து தெரிவித்து இருந்தார். எனக்கும் சதைதான் உள்ளது வெட்டினால் ரத்தம் வரும் என்றும் தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் கூறியிருந்தார். இதற்கு பலரும் அதரவு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் கோலிக்கு ஓய்வு அளிப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அதிரடி மன்னன் சேவாக் கூறியதாவது:-
 
கோலிக்கு தற்போது ஒய்வு தேவை. அவருக்கு ஓய்வு அளித்துவிட்டு, கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கலாம். கேப்டன் பதவியை கவனிக்க ரோகித சர்மா உள்ளார் என்று கூறியுள்ளார்.