திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (17:43 IST)

பண்ட்டின் ஆட்டம் எனது தொடக்க நாட்களை போல உள்ளது – சேவாக் புகழாரம்!

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டின் ஆட்டம் தனது கெரியரின் தொடக்க நாட்களைப் போல உள்ளதாக சேவாக் கூறியுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். மூன்று விதமான போட்டிகளிலும் அவரின் அதிரடி ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சேவாக் பண்ட் குறித்து ‘இந்திய அணிக்கு சமீபகாலத்தில் கிடைத்த மிகப்பெரிய லாபம் என்னவென்றால் பண்ட்தான். அவர் தனது முக்கியத்துவத்தை உணர்ந்து விளையாடுகிறார். அவரது ஆட்டப்பாங்கு எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைப் பார்ப்பது போல உள்ளது’ எனக் கூறியுள்ளார்.