வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2016 (12:33 IST)

இரண்டாவது ஒருநாள் போட்டி: 9,000 ரன்கள், வெற்றி முனைப்பில் தோனி மற்றும் குழுவினர்!!!

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

 
5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 
 
இந்திய அணியில் இன்று எவ்வித மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. வெற்றி கூட்டணியை அப்படியே தோனி தொடர்வார். 
 
ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும். தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர் ஆகியோர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் நீக்கப்படும் பட்சத்தில் ஆன்டன் டேவ்சிச், மேட் ஹென்றி ஆகியோர் இடம்பெறக்கூடும். 
 
பெரோஷா கோட்லா மிதவேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும். இது நியூஸிலாந்து அணிக்கு சற்று சாதகமான விஷயமாகவும் கருதப்படுகிறது.
 
9,000 ரன்கள்:
 
தோனி ஒருநாள் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்கள் மைல் கல்லை நெருங்குகிறார். தற்போது அவர் 8,939 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் 61 ரன்களை சேர்க்கும் பட்சத்தில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.
 
முதல் போட்டியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக விளையாடாத சுரேஷ் ரெய்னாவின் உடல் தகுதியை பெறவில்லை என்பதால் 2-வது ஒருநாள் போட்டியிலும் அவர் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.