வியாழன், 23 அக்டோபர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 23 அக்டோபர் 2025 (10:34 IST)

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
 
ஆரம்பத்திலேயே இந்திய அணி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் ஷுப்மன் கில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோஹ்லி ரன் எதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆனார். ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியிலும் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 29 ரன்களுடனும், அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் 20 ரன்களுடனும் களத்தில் நிலைத்து ஆடி வருகின்றனர்.
 
சற்றுமுன் வரை இந்திய அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
 
Edited by Siva