வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 7 மே 2015 (10:55 IST)

டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி கால் இறுதிக்கு முன்னேற்றம்

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
 

 
தற்போது ஸ்பெயின்யில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில்  ஜானெட் ஷூசரோவா -ரால்கா ஒலாரு ஜோடி சானியா மிர்சா - மார்ட்டினா ஜோடியிடம் நேருக்கு நேர் மோதியது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா-மார்ட்டினா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
 
இதேபோல் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ்பூபதி ஜோடி தோல்வியுடன் விடைபெற்றது.