வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஜூன் 2023 (08:32 IST)

காதலியை மணந்தார் சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்.. ரசிகர்கள் வாழ்த்து..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட், தனது நீண்ட நாள் காதலியான உத்கர்ஷா பவாரை நேற்று மணந்தார். மகாராஷ்டிராவில் உள்ள மஹாபலேஷ்வரில் திருமணம் நடைபெற்றது. கெய்க்வாட் மற்றும் பவார் இருவருக்கும் 24 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மணமகள் உத்கர்ஷா பவார் மகாராஷ்டிரா பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே அழைக்கப்பட்ட நிலையில் இந்த திருமண விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
கெய்க்வாட் மற்றும் கிரிக்கெட் பவார் திருமணம் நடந்ததை அடுத்து ரசிகர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva