திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (15:51 IST)

உடலுறவு வைத்துக் கொண்டால் பதக்கம் வெல்லலாம்! – ஒலிம்பிக் வீராங்கனை கருத்தால் பரபரப்பு!

சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் வென்ற ரஷ்ய வீராங்கனை உடலுறவு குறித்து கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் டோக்யோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்றவர் ரஷ்ய நீச்சல் வீராங்கனை அல்லா சிஷ்கினா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் “நான் எப்போதும் மருத்துவ ஆராய்ச்சிகளை பெரிதும் நம்பி இருப்பேன். அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால் உங்களுக்கு அதீத சக்தி வேண்டுமென்றால் நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் “உடலுறவு கொள்வது என்பது அவரவர் விருப்பம். உடலுறவு கொள்வதன் மூலம் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதனை நீங்கள் மேற்கொள்ளலாம். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு உடலுறவு நல்ல பலனை கொடுக்கும். ” எனத் தெரிவித்துள்ளார்.