தொடர் தோல்விக்கு பின் பெங்களூர் எடுத்த விஸ்வரூபம். குஜராத்தை நொறுக்கியது


sivalingam| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (07:26 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த பெங்களூர் அணி நேற்று ஆறாவது போட்டியாக குஜராத் அணியுடன் மோதியது.

 


இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி குஜராத் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. கெய்ல் அபாரமாக விளையாடி 38 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார். விராத் கோஹ்லி 64 ரன்களும் ஜாதவ் 38 ரன்களும் குவித்தனர். இறுதியில் 20 ஓவர்களில் பெங்களூர் அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

214 என்ற இமாலய இலக்கை விரட்டிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெய்ல் ஆட்டநாயகன் விருதை வென்றார்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :