ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (10:23 IST)

பேருந்து கண்ணாடியை உடைத்த ரோஹித் ஷர்மா… நிஜமாவே இவர் ஹிட்மேன்தான்!

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 8 அணி வீரர்களும் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஐபிஎல் 2020 தொடருக்காக மும்பையில் முகாமிட்டுள்ளன 8 அணிகளைச் சேர்ந்த வீரர்களும். அங்கு சென்று கொரோனா கால தனிமைப்படுத்தல்களை முடித்துக் கொண்டு இப்போது பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியின் போது அடித்த பந்து ஒன்று மைதானத்துக்கு வெளியே சென்று அங்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளது. இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஹிட்மேன் ரோஹித் ஷர்மாவை பாராட்டி வருகின்றனர்.