திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (23:13 IST)

செல்ல மகளின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட ரோஹித் சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டிருந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக வந்த தகவலை அடுத்து அவர் தனது மகளை பார்க்க நாடு திரும்பினார். இதனால் அவர் இன்று தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை

இந்த நிலையில் ரோஹித்சர்மா தனது செல்ல மகளின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ரோஹித்சர்மா மகளின் முகம் தெரியவில்லை என்றாலும் அந்த குழந்தையின் பிஞ்சுவிரல் ரோஹித்சர்மாவின் கைவிரலை பிடித்துள்ளது போல் உள்ளது.

2019ஆம் ஆண்டு தனக்கு சிறந்த ஆண்டு என்ற ரோஹித்சர்மா பதிவு செய்துள்ள இந்த டுவீட் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டுவீட் வெளியான சில மணி நேரங்களில் 58 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.