1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2022 (19:39 IST)

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சிஎஸ்கே வீரர் ஓய்வு

Robin
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
 
 இதனை அடுத்து அடுத்து ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக அவர் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராபின் உத்தப்பா முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருந்து வந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
46 ஒருநாள் போட்டிகள், 13 டி20 போட்டிகள் மற்றும் 205 ஐபிஎல் போட்டிகளில் ராபின் உத்தப்பா விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.