வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 14 மே 2016 (11:45 IST)

ரொனால்டோவை தள்ளிவிட்டு பந்தை தட்டிப்பறித்த சகவீரர் [வீடியோ]

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சக வீரர் ஒருவர் தள்ளிவிட்ட அவரிடமிருந்து பந்தை தட்டிப்பறிக்கு வீடியோ பரவி வருகிறது.

 
கிளப் அணிகளில் ஒன்றான ’ரியல் மாட்ரிட்’ அணியில் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ இடம் பிடித்து பல சாதனைகள் படைத்து வருகிறார். இந்நிலையில், ரியல் மாட்ரிட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்
 
அப்போது சக வீரரான லுகா மொட்ரிக், ரொனால்டோ பந்தை தடுத்தாட முற்பட்டபோது ரொனால்டோவை எதேச்சையாக தள்ளிவிட்டார். இதனால் ரொனால்டோ தடுமாறி கீழே விழுந்து விட்டார்.
 
இதைத் தொடர்ந்து சக வீரர்கள் விளையாட்டாக கிண்டலடிக்க ஆரம்பித்தனர். இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாத ரொனால்டோ பின்னர் புன்னகைத்த படி பயிற்சியை தொடர்ந்தார்.

வீடியோ கீழே: