மூன்றே மாதத்தில், கோடிக்கும் மேல் சம்பளம்: ரவி சாஸ்திரி கலக்கல்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 5 அக்டோபர் 2017 (19:48 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு சம்பளமாக ரூ. 1 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 

 
 
அனில் கும்ப்ளேவின் விலகளுக்கு பிறகு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார் ரவி சாஸ்திரி. இந்நிலையில் மூன்று மாத ஊதியமாக இவருக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை பிசிசிஐ வழங்கியுள்ளது.
 
அதேபோல் வெளிநாட்டு தொடரில் விளையாடியதற்காக வருவாய் பகிர்வு அடிப்படையில் தோனிக்கு ரூ.57,88,373 வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும், விஜய் ஹஸாரே மற்றும் ராஞ்சி டிராபி போட்டிகளில் பங்களித்ததற்காக ரவி சாஸ்திரிக்கு ரூ.69 லட்சமும், தோனிக்கு ரூ.57 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :