ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி.. சாம்பியன் பட்டத்தை நெருங்கிவிட்ட மும்பை..!
கடந்த சில மாதங்களாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 10-ம் தேதி முதல் இந்த தொடரின் இறுதி போட்டியில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
மும்பை மற்றும் விதர்பா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த இறுதி போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 224 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து விதர்பா அணி முதல் இன்னிங்ஸ்ஸில் விளையாடின நிலையில் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 105 நாட்களுக்கு ஆட்டம் இழந்தது.
இதையடுத்து மும்பை அணி 119 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை தற்போது 141 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது என்பதும், 260 ரன்கள் தற்போது முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்தது 400 முதல் 500 ரன்கள் வரை விதர்பா அணிக்கு வெற்றி பெற இலக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விதர்பா அணி அந்த இலக்கை எட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே மும்பை அணி இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva